ஸ்டாலின் டிவிட்டரில் மாற்றம்! கொந்தளிக்கும் சீமான் தம்பிகள்! BelongsToTamilianStock

 



தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டர் பக்க முகப்பில் ‘Chief Minister of Tamil Nadu, ”President of the DMK - என்றும் பதிவு செய்த அவர், மூன்றாவதாக ”Belongs to the Dravidian stock” என்று அழுத்தமாக இன்னொன்றைச் சொல்கிறார். அதாவது ”அவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” என்றும் பதிவிட்டுள்ளார். அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? மொழி வாரியாக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய தமிழ் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என அடையாளப்படுத்தியதன் நோக்கம் என்ன? திராவிடம் என்பது ஒரு சொல்லாடலே தவிர, அதற்கு வேறு எந்த முகவரியும் இல்லை. திராவிடத்திற்கு மொழி அடையாளமும் இல்லை, பூகோள ரீதியான அடையாளமும் இல்லை; மத அடையாளமும் இல்லை; ஜெனிடிக் ( Genitic) மூலக்கூறு அடிப்படையிலான வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிற, இன என்று வகைப்பட்டதும் இல்லை. அப்படி எந்த முகவரியும் இல்லாத திராவிட இன அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஆறு கண்டங்களில் வாழும் எட்டு கோடி தமிழர்களுக்கும் ’தமிழ்நாடு’ என்ற பூர்வீக பிறப்பிடம் உண்டு. உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் இனமாகப் பெருமையாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் மண்ணின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், தமிழ் இனம் என்பதை விட்டுவிட்டுத் தான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? ஸ்டாலின் அவர்களுடைய இந்த திராவிட இன வாதம், தமிழ் இன அழிப்பின் அடையாளம் என பொருள் கொள்ளலாமா? என நாம்தமிழர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர், #BelongsToTamilianStock  என்ற கொத்துச் சொல்லின் மூலமாக இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது, கடந்த தேர்தலில் வாக்கு சதவிகித அடிப்படையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம்தமிழர் கட்சி மூன்றாமிடத்தில் வந்த்தினால், திமுக அரசுக்கு உண்மையான எதிர்க் கட்சியாக  இருக்கும் என்று ஆய்வாளர்கள் பலரும் கணித்திருந்தனர், இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே நாம்தமிழரின் இணைய பரப்புரையை சந்திக்க நேரிட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் விவாத்ததை ஏற்படுத்தியுள்ளது. 

No comments