குழந்தைகளை தாக்குகின்றது:யாழில் சிறுமி மரணம்!கொரோனா அபாயம் நீங்காதா நிலையில் யாழில் கொரோனா தொற்றால் ஐந்து வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனிடையே நேற்று யாழ் மாவட்டத்தில் தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 24 நாளான குழந்தைக்கும், 6 மாத கால குழந்தைக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று யாழ் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் தெல்லிப்பளை பகுதியில் தாய்க்கு கொரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள  24 வயதான சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் 6 மாத குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments