போகோ ஹராம் தலைவரின் மரணம்! விசாரணையில் நைஜீயா இராணுவம்


நைஜீயாவில் பயங்கரவாத அமைப்பாகச் செயற்படும் ஆயுதக்குழுவான போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மற்றாெரு ஆயுதக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நைஜீயாவின் மேற்கு மாகாணத்தில் இயங்கிவரம் ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி (ISWAP) அமைப்பினருடன் நேருக்கு நேர் நடத்த மோதலில் அபுபக்கர் ஷெகாவ் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி (ISWAP) என்ற இஸ்லாமிய அமைப்பு 2016 ஆம் ஆண்டு போகோ ஹராமிலிருந்து பிரிந்திருந்தது.

இது குறித்து நைஜீய இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் முகமது யெரிமா தெரிவிக்கையில், இது ஒரு வதந்தியாக இருக்கலாம் நாங்கள் அதை விசாரித்து வருகிறோம். நாங்கள் அதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாங்கள் ஏதாவது சொல்ல முடியும் என்றார்.

அபுபக்கர் ஷெகாவ் 2009 ஆம் ஆண்டு முதல் 30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளார். சுமார் இரண்டு மில்லியன் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்ததுள்ளார் மற்றும் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதது.

No comments