இலங்கை முடக்கம்:30ம் திகதி வரை நீள்கிறது!நாடளாவிய முடங்கலிற்கு ஏதுவாக எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் 21ம் திகதி இரவு பிறப்பிக்கப்படவிருந்த முடக்க நிலை இதன் மூலம் 30ம் திகதி வரை நீடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments