அமெரிக்கத் துருப்புகள் செப்டம்பர் 11 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் - ஜோ பிடம்


ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவிக்க உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் தலிபான்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட  இந்த வருடம் மே மாதக் காலக்கெடுவை அமெரிக்கா பிற்போட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான புதிய காலக்கெடு 2001 இல்ல் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவு நாளில் நடைபெறவுள்ளது.

No comments