திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமை போன்று இவ்வாண்டு மே 18 ஆம் திகதி கொரோனா சுகாதார

வழிகாட்டல்களைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு  அறிவித்துள்ளது. 

18 ஆம் திகதி முற்பகல் 10.30க்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு இனப்படுகொலையானவர்களிற்கு நினைவஞ்சலி செலுத்த கோரப்பட்டுள்ளது. 

அத்துடன் அன்று மாலை 6 மணிக்கு வணக்கத் தலங்களில் மணி ஒலித்து, வீடுகளில் விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தி கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கோரியுள்ளது.


No comments