ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல்


ஈராக்கில் அமெரிக்கப் படைகளை குறிவைத்து ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வடக்குப் பகுதியில் குர்திஸ்தான் ஆட்சியின் கீழ் உள்ள எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியை தங்கள் தளமாக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு இங்கு ட்ரோன் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகளை குறிவைத்து வழக்கமாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் துருக்கிய வீரர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

No comments