புகார்களால் நிரம்பும் இங்கிலாந்து பள்ளிகளில் பாலியல் துஸ்பிரயோக கலாச்சாரம்!!


இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.

ஆசிய அமெரிக்கரான சோமா சாரா (22), இங்கிலாந்து பள்ளிகளில் படித்தவர். சாரா பாதி சீனர் என்பதால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது அவரைப் பார்ப்பவர்கள் என்னுடன் வருகிறாயா, நீ அந்த ஆபாச நடிகையைப் போலவே இருக்கிறாய் என்று சொல்லி வம்பு செய்வார்களாம்.

சாரா கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், அவரது தோழிகள் பலர், சக மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கதைகளை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைவருக்கும் அழைப்பு ( Everyone's Invited)  என்ற இணையதளத்தைத் தொடங்கி, தாங்கள் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் .

ஒரே வாரத்தில் 300 பேர் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை அந்த தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான கதைகள் குவியத் தொடங்கின.

11 வயதேயான மாணவிகள் கூட, நிர்வாண படங்களைப் பகிர கட்டாயப்படுத்தப்பட்டது முதல், பார்ட்டிகளில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு துஷ்பிராயோகம் செய்யப்பட்டது வரையிலான கதைகள் குவிந்தன.

பிரதமர் போரிஸ் ஜான்சனும், இளவரசர் வில்லியமும் படித்த பள்ளிகள் உட்பட, இங்கிலாந்தின் ன் பிரபலமான 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.இன்று வரை, 8,000 மாணவிகளிடமிருந்து பாலியல் புகார்கள் வந்துள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

சாராவிடன்  இந்த புரட்சிகர திட்டத்தில் இணைந்திருப்பவர் கார் விபத்தில் பலியான பாஸ்ட் அண்டு புரியஸ் (Fast and the Furious) நடிகரான பவுல் வால்கர் மகளான மெடோ வால்கர்

ஆன்லைன் ஆபாச தளங்களும், தரம் குறைந்த பாலியல் கல்வியும்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்கிறார் மெடோவால்கர். ஆனால்,சாரோவோ பெண்களுக்கும் இதில் பங்கு உண்டு என்கிறார்.

கிம் கார்திஷியன் போன்று அசாதாரண மாடல்கள் உடல்வாகைக் காட்டி, இளம்பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குபவர்களையும் குற்றம்சாட்டுகிறா அவர்.இதற்கிடையில், தங்கள் மகன் அல்லது மகள் இதுபோல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தெரியவந்தால், புகாரளிக்க முன்வருமாறு போலீசார் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.]

இங்கிலாந்து கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் கூறும் போது எந்தவொரு பள்ளியும் "இளைஞர்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இடமாக" அல்லது துஷ்பிரயோகம் நடைபெறக்கூடிய இடமாக இருக்கக்கூடாது.

ஒரு வலைத்தளத்தில்  இடம்பெற்று உள்ள பள்ளி மாணவர்களால்  செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் "அதிர்ச்சியூட்டும் மற்றும் வெறுக்கத்தக்கவையாக உள்ளன. இதுகுறித்து  தகுந்த நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறினார். 

No comments