டிவிட்டர் நிறுவனத்திடம் மன்றாடிய மோடி அரசு!


கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், டிவிட்டரில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, டிவிட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துறைக்கு அமைச்சராக இருப்பவர் ரவிசங்கர் பிரசாத்.

இதனையடுத்து, சில பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், மோடி அரசின் மட்டமான செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கியுள்ளது டிவிட்டர் நிறுவனம்.

இத்தகயைப் பதிவுகள், இந்தியாவின் ஐ.டி. சட்டங்களுக்கு எதிரானது என்று டிவிட்டர் நிறுவனத்திடம் குறிப்பிட்டிருந்தது மோடி அரசு என்பது கவனிக்கத்தக்கது.

தனது செயல்பாட்டை, மக்களுக்கானதாக மாற்றிக்கொள்ள முயலாத மோடி அரசு, இதுபோன்ற கருத்து சுதந்திரங்களின் மீது எப்போதுமே கைவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments