மரணப் பிடியில் மக்கள் , கொள்ளை லாபம் பார்க்கும் தடுப்பூசி நிறுவனம்!


இந்தியாவில் கட்டுக்கடங்கா கொரோன தாக்கம் அதிகரித்து நாள் ஒன்றிட்கே இரண்டு இலட்ச்சத்தை தொடும் தொற்றுக்கள் ஏற்படும் வேளையில் , மருத்துவ மனைகளில் ஒஸ்சிசன் இன்றி மக்கள் நாளாந்தம் ஆயிரக்கணக்கில் இறந்து வருகின்ற்னர், இந்நிலையில்  மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தனது கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்கப்படும் விலையை அறிவித்துள்ளது பாரத் பாயோடெக் நிறுவனம்.

அதன்படி, மாநில அரசுகளுக்கு சீரம் நிறுவனம் அறிவித்த தடுப்பு மருந்து விலையைவிட, அதிக விலை நிர்ணயித்து அறிவித்துள்ளது இந்த தனியார் நிறுவனம்.

பாரத் பயோடெக் நிறுவன அறிவிப்பின்படி, ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து மத்திய அரசுக்கு இந்திய மதிப்பில் ரூ.150க்கு தரப்படும் நிலையில், மாநில அரசுக்கோ இந்திய மதிப்பில் ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தனியார் மருத்துவமனைகளுக்கான விலை, இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு இந்திய மதிப்பில் ரூ.1200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு டோஸ் விலை $15 – $20 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு நேரடியாக கொடுக்கும் மருந்தின் விலை, இந்தளவிற்கு அதிகரித்து அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தனது கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில், 50%க்கும் மேலாக, மத்திய அரசுக்கே வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments