பாரிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

பாரிசின் 16 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றி டுனன்ட் மருத்துவமனைக்கு முன்னால் (இன்று திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1.:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் நடந்துகொண்டிருந்த ஆண் மீது இனம் தெரியாத நபர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஆண் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை தடுக்கச் சென்ற மருத்துமனைப் பெண் பணியாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிற்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலாளி உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலாளி தப்பிச் செல்வதற்கு மற்றொருவர் உந்துருளியில் காந்திருந்தாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

16 வது வட்டாரத்தின் நகர முதல்வர் பிரான்சிஸ் ஸ்ஸ்பைனர் செய்தியாளர்களிடம் கூறினார்: இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.


No comments