யாழ் நவீன சந்தை தொகுதியில் 54 பேருக்கு கொரோனா!!


யாழ்ப்பாணம் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெட்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

464 பேருக்கு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை பெற்ற மாதிரிகளின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும். அதன் பின்னரேயே யாழ்.நகர் வர்த்தக நிலையங்களைத் திறப்பதா? மூடுவதா என்று தீர்மானிக்கப்படும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments