மக்கள் படுகொலை! முன்னார் போர் வீரருக்கு ஆயுள் தண்டணை


2011 மார்ச் மாதம் மேற்கு ஐவரி கோஸ்டில் நடந்த படுகொலைகளில் நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்ய முன்னாள் போர்வீரர் அமட் ஓயெரெமிக்கு அபிட்ஜனில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ஐயோரி கோஸ்ட் தேர்தலுக்கு பிந்தைய உள்நாட்டுப் போரின் பிடியில் இருந்ததால் நிகழ்ந்த டியூகோவில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பொதுமக்களைப் படுகொலை செய்தது, பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சித்திரவதைகள் என24 குற்றச்சாட்டுகளை ஓயெரெமி எதிர்கொண்டார்.

டியூகோவில் ஒரே நாளில் 817 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. அதே நேரத்தில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக  ஐ.நா கூறியுள்ளது.

ஓரேமியின் சட்டத்தரணி அவர் செய்த படுகொலைகளை மறுக்கவில்லை.  ஆனால் அவர் கிளர்ச்சித் தலைவர்களின் கட்டளைக்கு உட்பட்டுச் செயற்பட்டார் எனக் கூறியுள்ளார்.

ஐவரி கோஸ்ட்டின் கோகோ உற்பத்தி செய்யும் மேற்கு பிராந்தியமானது 2010-11 தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடியின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments