வடக்கில் முன்னேற்றம்:மாவட்டம் தாண்டி அடிதடி!வடக்கில் சட்டம் ஒழுங்கு நாள் தோறும் மோசமடைந்துவருகின்ற நிலையில் யாழில் இருந்து வாள்கள் சகிதம் சென்ற குழு  வவுனியாவில் இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியா, மூன்று முறிப்பு பகுதி இளைஞன் யாழ்.பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி பெண்ணை அழைத்து சென்று பதிவு திருமணமும் செய்துள்ளார்.

இதனையடுத்து யாழில் இருந்து இரு வான்களில்   வாள்;கள் சகிதம் 10 மேற்பட்ட இளைஞர்களுடன் வவுனியாவுக்கு சென்றிருந்த யுவதியின்  தந்தை குறித்த இளைஞன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளரின் வீடு,  இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு என்பவற்றுக்குள் புகுந்து  அச்சுறுத்தியதுடன் வீட்டு உடமைகளையும் அடித்து நொருக்கியுள்ளார்.

இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் முறையிட்டுள்ளனர்.


No comments