யாழ்ப்பாண கோவிலும் பதறும் சிங்களமும்?கொரோனா எச்சரிக்கைகளை புறந்தள்ளி யாழ்ப்பாணத்தில் ஆலய திருவிழாக்கள் களை கட்டியுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள தேர்த்திருவிழா நடந்தேறியுள்ளது.

தேர்த்திருவிழா தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுவரும் சிங்கள ஊடகங்கள் வடக்கில் அரச சட்டங்களை தமிழ் மக்கள் மதிப்பதில்லையென்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments