இந்திய மீனவர்களிற்கு தனியான தீவுச்சிறை?இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இந்திய இலங்கை கடல் நடுவில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை கடற்படைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்தவொரு இந்திய மீனவர்களும் எமது கடற்பிரதேசத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கடற்படையினரை நான் கேட்டுக்கொண்டேன்.

மேலும் எங்கள் உள்ளூர் மீனவர்களுக்கு நிலைமை மாறுபடுமாறு தொடர்பில் அறிவுறுத்தியுள்ளேன் "என்று தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே எல்லை தாண்டி வருகை தரும் இந்திய மீனவர்களை தடுத்து வைக்க இலங்கை கடற்படை யாழ்ப்பாணத்தை அண்டிய மக்கள் குடியிருப்பற்ற தீவு பகுதியொன்றை தெரிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றது.


No comments