சுரேஸ்பிறேமச்சந்திரன் முதலமைச்சர் வேட்பாளர்!வடமாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சுரேஸ் பிறேமச்சந்திரன் போட்டியிடுவது நிச்சயமாகியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பங்காளி கட்சி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும். கடந்த 5 ஆண்டுகள் மாகாண சபை சேவையில் மக்கள் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. எனவே எதிர்வரும் தேர்தலில் வடக்கு மக்கள் மாவை சேனாதிராசாவுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அரசியலில் மிகுந்த அனுபவமுடையவர். எனவே அவர் மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவானால் அது வரவேற்கத்தக்க விடயமாகும். 

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் அவர்களுடன் இணைந்து விமர்சனங்களுக்கு மத்தியிலும் நான் அந்த மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். அந்த மக்களுக்கு தொடர்ச்சியான இடைவிடாத சேவை கிடைக்க வேண்டுமெனில் வட மாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராசாவை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்- என்றார்


No comments