மைத்திரி தனிவழி:சிதறும் மொட்டு!மொட்டுக்கட்சி கூட்டு நாள் தோறும் சிதறிவருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, சுதந்திரக் கட்சி, தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மகிந்த தலைமையில் நடைபெற்ற பங்காளி கட்சிகள் கூட்டத்தில் விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பில ,வாசுதேவ உள்ளிட்டோர் புறக்கணித்திருந்த நிலையில் கொரோனா சூழலை காரணங்காட்டி மேதினத்தை கைவிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மைத்திரி தனித்து மேதின அறிவிப்பை விடுத்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.  
No comments