திரையரங்குகள் யாழில் இழுத்து மூடல்!யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக திரையரங்குகளில் பொதுமக்கள் அதிகளவில ஒன்றுகூடல் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே திருநெல்வேலி சந்தை தொகுதியில் அதிக அளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கடந்த 28 ம் திகதியிலிருந்து கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பாற்பண்ணை கிராமத்தில் பாரதி புரம் என்னும் பிரதேசம் தவிர்ந்த அனைத்து பிரதேசங்களும் கண்காணிப்பு வலய பிரதேசத்திலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் விடுவிக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments