அடுத்த மோசடி:தெல்லிப்பழை வைத்தியசாலையில்!



வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.

புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி அரங்கேறியுள்ளது.

உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேரகாலமின்றி விடுமுறை நாளிலும் பணியாற்றியதாக கணக்கு காண்பித்து மில்லியன்களில் சுருட்டிக்கொண்டமை கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அப்பட்டமாக மோசடி கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதனை கண்டுகொள்ளாது சுருட்டிய பணத்தை மீள செலுத்துமாறு கதிரியக்க அதிகாரிகளிடம் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் கெஞ்சிவருவதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே கிடைக்கின்றது என்பதை குறிப்பிட முடியும்.

உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர்.

மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர் தெரிவித்துள்ளார்;.


No comments