அரசியல் ஜடியா தற்போதைக்கு இல்லை:வேலன் சுவாமிகள்!

 நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரமாட்டேன் என்று வேலன் சுவாமிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு அமைய அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கலாம் என்ற கருத்து முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.


அதுதொடர்பிலேயே வேலன் சுவாமிகள் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.


“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரழுச்சி இயக்கத்தின் கொள்ளைகளில் ஒன்றான உறுப்பினர்கள் எவரும் கட்சி அரசியலிலோ தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை என்பது என்னையும் சாரும்.


நாம் அரசியல் மற்றும் சமூக மட்டங்களை இணைத்து உரிமைகளுக்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலேயே எமது பணியை முன்னெடுப்போம்” என்றும் வேலன் சுவாமிகள் கூறினார்.

No comments