கடல் வாடகைக்கு:வலுக்கிறது எதிர்ப்பு!



இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் தொழில் ஈடுபட அமதிக்கப்போவதான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக குரல்கள் வலுத்துவருகின்றன.மீனவ அமைப்புக்கள் பெரும்பாலானவை அச்சங்காரணமாக முடங்கியுள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவிப்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் நாட்டுப் படகுகளை கட்டணம் செலுத்தி இலங்கை கடல் எல்லையில் அனுமதிப்பது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சி உறுப்பினர்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளனர்.

முன்னதாக தீர்மானத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து முரண்பாடு ஏற்பட்டதால் சபை அமர்வுகள் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர், மீண்டும் சபை கூடியபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரால் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

எனினும், கண்டனத் தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments