மீண்டும் கருணா ஆட்சேர்ப்பில்!


யுத்த காலம் தமிழ் மக்களிடையே நகைச்சுவை உணர்வை இல்லாதொழித்துவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்ற போதும் இதனை இடையிடையே பொய்யாக்க நகைச்சுவை துணுக்குகள் வந்துவீழ்ந்துவிடுகின்றது.

கிழக்கில் செல்லாக்காசாகியிருக்கின்ற கருணா என்றழைக்கப்பட்ட முரளிதரனை முன்னிறுத்தி அவ்வாறான நகைச்சுவைகள் இப்போது கொடி கட்டிபறக்கின்றது.

அதிலும் அற்ப சலுகைகளிற்காக விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவரென அடையாளப்படுத்தப்பட்ட கருணா புட்டியும் குட்டியுமாக இருக்கின்ற புகைப்படங்கள் மத்தியில் தனது படையணிக்கு புதிதாக ஆட்சேர்ப்பதாக தற்போது வெளிவந்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. 

No comments