சிறையில் இந்திய பிரஜை கொலை:ஜேவிபிகுளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை உயிரிழந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்திய பிரஜையின் உயிரிழப்பு காரணமாக பல முக்கிய விபரங்கள் வெளியில் தெரியவராமல் போகலாம்.

இந்திய பிரஜையின் உயிரிழப்பு குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குளியாப்பிட்டியில் புத்தரின் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொண்டதால் வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டியில் பல சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 19ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments