மீண்டும் முளைக்கும் மினிமுகாம்கள்?கொரோனாவை முன்னிறுத்தி யாழப்பாணத்தில் மூடப்பட்ட மினிமுகாம்கள் மற்றும் காவலரண்களை படையினர் மீள நிறுவ முற்பட்டுள்ளனர்.

யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் இராணுவத்தினர் மீண்டும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை கொக்குவில் சந்தியில் தகர கொட்டகை மினி முகாம் ஒன்றினையும் புதிதாக அமைத்துள்ளதை உள்ளுர் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். 

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


No comments