வத்திராயனிற்கு வந்த சீன மொழி வெளியேற்றம்?



வடமராட்சி கிழக்கு வத்திரயானில் தனியார் ஒருவரால் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்ட சர்ச்சைகள் மத்தியில் அப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. 

எனினும் இந்த சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு வெளிநாட்டு நபர் இங்குள்ள ஒப்பந்த நிறுவனத்திடம் ஒரு திட்ட படத்தை கொடுத்து இதே அமைப்பு போல அமைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் அந்த திட்ட படத்தில் உள்ளது  போல சீன எழுத்தில் எழுதியுள்ளனர். அவர் சீனமொழியை பயன்படுத்துமாறு கூறவில்லை என  அறியமுடிகிறது.

இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  சீன எழுத்தினை அகற்ற பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


No comments