டென்மார்க்கில் 150 மில்லியன் யூரோ திறைசோியில் மோசடி!


டென்மார்க்கில் உள்ள சட்டவாளர்கள் மூன்று பிரித்தானியர்களையும் மூன்று அமெரிக்கர்களை ஒரு ஜெர்மனி வங்கி மூலம் 1.1 பில்லியனுக்கும் அதிகமான குரோனர்களை ($175m; £130m; €150m) டென்மார்க் திறைசோியில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மொத்தம் 12.7 பில்லியன் டேனிஷ் குரோனர்களை திறைசோியில் மோசடி செய்த கம்-எக்ஸ் (cum-ex) வர்த்தக மோசடியின் ஒரு பகுதியாக இரண்டு பிரிட்டிஷ் குடிமக்கள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments