இலங்கையில் இணைய வழி போதைப்பொருள்!

 


இலங்கையில் இணைய வழி போதைப்பொருட்கள் விற்பனையாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இணையத்தில் பொருள்கள் கொள்வனவு குறித்து இலங்கைப்பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையத்தில் விற்பனை செய்யயப்படும் பொருள்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, போதைப்பொருட்கள்,கொள்ளையடிக்கப்பட்ட அலைபேசிகள், தங்க நகைகள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதென்றும் எனவே பொருள்களை கொள்வனவு செய்யும் போது, விற்கும் நபரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் போதைபொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தவே தகவல் பெறும் உத்தி அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.No comments