நாடுகடத்தப்பட்ட 24 பேரும் இலங்கை வந்தடைந்தனர்!! இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு!


சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனிலிருந்து 20 பேரும், சுட்சர்லாந்திலிருந்து 4 பேருமே நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவர்.

குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அவர்கள் 2012 மற்றும் 2013 முதல் அந்த நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்தக் குழு இன்று காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டுசில்டோர்வ் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி - 308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையினரால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

No comments