கனடாவில் தடுப்பூசி விநியோகம் திடீர் நிறுத்தம்!


கனடா முழுவதும் நோய் தடுப்பு தொடர்பாக தேசிய ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தல் காரணமாக கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி விநியோகம் முதல் கட்டமாக 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்தது.

 இந்நிலையில் தடுப்பூசி மருந்துகளை அடுத்த கட்டமாக 55 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை உடனடியாக அமலில் வருவதற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து குறித்த மேலும் பல ஆய்வுகளை செய்ய இருப்பதன் காரணத்தினாலேயே இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

No comments