இலங்கையில் வாழும் சீனர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை!


சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்சே பெற்று கொண்டார். உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த பிறகே, இலங்கை குடிமக்களுக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவானது அன்பளிப்பாக அளித்த இந்த தடுப்பூசி, முதல்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்குத் தான் வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments