இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்


இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கப்பட உள்ளமையினாலேயே இலங்கை தொடர்பான விவாதம் பிரித்தானியாவில் பாராளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அனைத்து கட்சிகளினதும் தமிழ் பிரதிநிதிகள் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த விவாதம் மார்ச் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான கோ குழு பொறுப்புக்கூறல் குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்ததால் இந்த விவாதத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

No comments