காலை பிடிக்க மாட்டேன்:பிள்ளையான்!

 


சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை பேசி வருகின்றனர் என பிள்ளையான் என்றழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

எந்த வேலைத்திட்டத்தினையும் செய்யாமல், வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து அவன் வருகின்றான், இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள்.

நாம் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம். நாங்கள் முதலில் மாற வேண்டும். வேறு எவரதும் கால்களைப் பிடிக்கத் தேவையில்லை.

நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளை பெறுவதாகும்.

சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார்.கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர்.

இன்று மேய்ச்சல் தரைப்பிரச்சினை பற்றி கதைக்கின்றனர். அதுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்யுங்கள், சென்று போராடுங்கள். அதுதான் உங்கள் வேலை. நாங்கள் மக்களின் தேவையினை நிறைவேற்றுவோம். ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை எங்களை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments