புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!


யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய துரைராசா சந்திரகோபால் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்திரகோபால் வீட்டில் தனிமையில் வசித்து வந்திருந்திருந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழைய பகையே இக்கொலைக்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என காவல்றையினர் தெரிவித்துள்ளனர்.


No comments