இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! கிளிநொச்சியில் போராட்டம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அராங்கத்தை நிறுத்தக்கோரி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பு ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அராங்கத்தை நிறுத்தக்கோரி கோசங்கள் எழுப்பியினர். அதேபோன்ற பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டமானது, பல்வேறு சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments