பிரான்ஸ் லாச்சப்பலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள்
நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்று (17.03.2021) புதன்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சியாக நடைபெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழுணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 15.00 மணியளவில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வாளர்கள் பலரின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து எதிர்வரும் 23.03.2021 செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 14.45 மணிக்கு பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
Post a Comment