ரஷ்ய அதிகாரிகள் மீது தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா


ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டி, ரஷ்யாவின் 4 முதுநிலை அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. 

இதன்படி ரஷ்ய புலனாய்வுக் குழுவின் தலைவர் அலெக்ஸாண்டர் பாஸ்ட்ரிகின், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் குழு தலைவர் இகர் கிராஸ்னோவ், தேசிய பாதுகாப்புப் படை தலைவர் விக்டர் ஸோலோடோவ், மத்திய சிறைத் துறைத் தலைவர் அலெக்சாண்டர் கலஷ்னிகோவ் ஆகிய அந்த 4 அதிகாரிகள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் விஷம் தொடர்பாக ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யாவின் உயர்மட்ட உளவாளியையும் மற்ற ஆறு பேரையும் குறிவைக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்த நகர்வுகளுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன

No comments