3லட்சம் பேர் பலி! பிரேசில் அதிபருக்கு கடும் எதிர்ப்பு!


பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்றால் ஒரு நாளில் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது, இதுவே உலகிலையே ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் மரண எண்ணிக்கையின் புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது.

பிரேசிலிய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தொலைக்காட்சியில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பொதுமக்கள் மத்தியில் அதிபருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது,  பானைகள், தகரங்களைக்கொண்டு ஒலி எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கொரோன வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பெரும் நெருக்கடிக்குள் அதிபர் தள்ளப்பட்டுள்ளார். இவ்வாண்டு கிருமித்தொற்றுக்குத் தடுப்பூசிப் போடும் ஆண்டாக இருக்கும் என்று அவர் தமது உரையில் உறுதியளித்திருந்தபோதும். அரசின் செயற்ப்பாடுகள் கையாளும் முறையால் பொதுமக்களை சினமடைவைத்துள்ளது.இதுவரை அங்கு கிருமித்தொற்றால் 300,000 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.No comments