அமெரிக்காவில் கடும் பனிப்புயல் , பல மாநிலங்கள் போக்குவரத்து துண்டிப்பு!


அமெரிக்காவின் மேற்குப் பகுதி கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வட்டாரத்தில் 1 மீட்டர் உயரம் வரை பனி பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வயோமிங் (Wyoming), நெப்ராஸ்கா (Nebraska), சௌத் டகோட்டா (South Dakota) ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த பனிப்புயல் வீசும் என்று தேசிய வானிலைச் சேவை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கொலராடோ மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பனிப்புயல் காரணமாக பல மாநிலங்களுக்கு இடையிலான விரைவுச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.பொதுமக்கள் வீட்டிலோ உள்புறத்திலோ இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments