ஆணைக்குழுக்களால் நீக்க முடியாது:சஜித்




அரசியலிருந்து எம்மை நீக்கி தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க ஆணைக்குழுக்களை அமைக்கின்றனர். அந்த சவாலுக்கு முகம் கொடுக்க ரணசிங்க பிரேதாசவின் மகன் என்றவகையிலும், ஐக்கிய மக்கள் சக்தியும் தயாரரென ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். 

எமக்கெதிரான  சகல தடைகளையும் சவால்களையும் கல்லெறி தாக்குதல்களையும் எமது பயணத்தை பலப்படுத்துவதற்கான, ஆசீர்வாதமாக பயன்படுத்துவதாக  தெரிவித்தார்.

'டீல் அரசியலை இல்லாமல் செய்யவும், உள்ளக ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும், கிராமம், நகரத்தில் சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கவும்  கருவில் உள்ள சிசு உள்ளிட்ட அனைவரது உரிமைகளைப் பாதுகாக்கவும் குடும்பவாதத்தை நிராகரித்து, மக்கள்வாத அரசியலை உருவாக்கவே நாம் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம்' என்றார்.

 'எமது முதலாவது போராட்டத்தில் நாம் வெற்றிபெற்றோம், அதற்காக பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தோம். இறுதியில் சட்டவிரோத கட்சி என்ற சவாலுக்கு முகம்கொடுத்ததுடன், நாலாபுறமும் கல்லெறி தாக்குதலுக்கும் முகம்கொடுத்தோம். அந்த கல்லெறி தாக்குதல் இன்றும் தொடர்கின்றன' என்றார்.  

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை கைவிடாத பண்பு எமது மரபணுவில் உள்ளது என தெரிவித்த அவர், கொரோனாவுடன் மக்கள் பாரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்ததுடன்; அந்த பாரிய அச்சுறுத்தல் ஊடாக எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாடுகளு பல சவால்கள் ஏற்பட்டன.

முகக்கவசம் போடவில்லை, சுகாதார பரிந்துரைகளை கடைபிடிக்கவில்லை என தெரிவித்து எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை முடக்கப் பார்த்தனர் என்றார். 

அபிவிருத்திகள் செயழிலந்துள்ளன. உரிய திட்டமிடலின்றி கொரோனா செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்த அவர், மக்கள் துயரங்களை இல்லாமல் செய்ய வீதிக்கு இறங்க விரைவில் தயாராகுங்கள் என மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

No comments