மீண்டும் எம்.ஜ அணிகள்!மீண்டும் வெளிநாட்டு இராஜதந்திரிகளது நடமாட்டங்களை கண்காணிக்க புலனாய்வு கட்டமைப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான செயற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் புலனாய்வுப்பிரிவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் யாரை சந்திக்கிறார்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்ற விபரங்களை சேகரிக்க புலனாய்வுப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பில் தனது செயற்பாடு கண்காணிக்கப்படுவதாக கனேடிய தூதர் அறிவித்துள்ள நிலையில் இச்செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு - இந்திய தூதர் சந்திப்பில் பங்கெடுத்த இரண்டாம் மட்ட தலைவர்கள் சந்திப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவிற்கு போட்டுக்கொடுத்த பரிதாபமும் நடந்துள்ளது.


No comments