ஈஸ்டர் தாக்குதல் வேறு:நவாலி தாக்குதல் வேறா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் ஒரு தேவாலயம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது.

அக்குண்டு வீச்சில் இறந்த 147 பொதுமக்கள பற்றி யாரும் பேசவில்லை என தெரிவித்துள்ளார் ரூக்கி பெர்னாண்டோ. மனித உரிமை ஆர்வலரான அவர் நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலய தாக்குதல் தொடர்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 147 அப்பாவி பொதுமக்களும் தமிழ் மக்கள் என்பதாலேயே பேசப்படவில்லை.

ஆனால் தெற்கில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்பதாலேயே பேராயர் முதல் அனைவரும் பேசிக்கொண்டிருப்பதாகவும் சிங்களவரான ரூக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.No comments