யாழில் தாய் கைது:குழந்தை மீட்பு!யாழ். வேளாங்கன்னி தோட்டம் பகுதியில் தாயொருவரால் பச்சிளங் குழந்தை துன்புறுத்தப்பட்ட நிலையில் இன்று அக் குழந்தை ஊடகவியலாளர்களது துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.தாயாரும் கைதாகியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக, குழந்தை துன்புறுத்தப்படும் காட்சி கிடைத்தவுடன் இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு அறிவித்ததுடன் அதனை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியிருந்தனர்.இதனிடையே சம்பவம் நடந்த இடம்  சிறுவர் நீதிமன்றத்தின் அருகில் வசித்த மக்களை குடியேற்றிய புதிய குடியேற்றதிட்டமேயென தெரியவந்துள்ளது. 

அரேபிய நாட்டிலுள்ள கணவர் செலவிற்கு பணம் அனுப்பாத நிலையில் அவரிற்கு அனுப்பி வைக்கவென இக்காணொளியை பதிவு செய்ததாக கைதான தாய் தெரிவித்துள்ளார்.


No comments