இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது


தென்மேற்கு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

பிரிஸ்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ( புதிய காவல்துறை குற்ற மசோதா) அங்குள்ள மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தரப்பினரால் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் ஒருவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவருக்கு விலா எலும்பு உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் வாகனங்கள் வன்முறையாளர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. காவல் நிலையம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இச்சம்பவங்கள் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை அல்ல. இது ஒரு வன்முறைய என இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் காவல்துறைக் கூட்டமைப்பின் தலைவர் ஜோன் ஆப்டர் கூறினார்.

உள்துறை அமைச்சர் பிரிதி படேல் மோதல்களை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கண்டித்தார். ஒரு சிறு குழுவினரின் வன்முறை ஒரு போதும் பொறுத்துக்கொள்ளக்கூடியது அல்ல என அவர் டவீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் இங்கிலாந்தில் பொதுமக்கள் கூட்டங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, லண்டனில் ஒரு முடக்க நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 36 பேர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்து குறிப்பிடத்தக்கது.

No comments