சாணக்கியனை வைத்து சுமந்திரனின் அரசியல்!யாழ்ப்பாணத்து அரசியலில் தனது தொண்டர்களுடன் தூக்கிவீசப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் சாணக்கியனை முன்னிறுத்தி தனது இழந்து போன ஆதரவு புலத்தை பெற முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு இலட்சம் வாக்கு பெற்று வெற்றி பெறுவேன் என சவால் விடுத்த சுமந்திரன் இம்முறை தேர்தலில் தோற்றே போனார்.ஆனாலும் அவரது பேரம் பேசுதல்கள் ,கொழும்பிற்கு வாக்கெண்ணும் போதே இலங்கை விமானப்படை உலங்குவானூர்தியில் பயணம்,பின்னராக வெற்றி அறிவிப்பு என்பவை கூட்டமைப்பின் மேல்மமட்டங்களிற்கும் ஆட்சியாளர்களிற்கும் மட்டுமே தெரிந்த வெளிவராத கதைகள்.

இந்நிலையில் பொத்துவில்-பொலிகண்டியை தனக்கானதாக முற்பட்டு அதிலும் மூக்குடைபட்ட சுமந்திரன் தற்போது தனது இளைஞரணியில் நம்பிக்கையிழந்து மட்டக்களப்பிலிருந்து தருவித்த சாணக்கியன் சகிதம் பயணிக்கின்றார்.

கட்சி ஆதரவாளர் திருமணத்திற்கு வருகை தந்திருந்த சாணக்கியனை தென்னிந்திய நடிகர் பாணியில் அழைத்து சென்று படமெடுத்து பிரபலம் தேடும் அளவிற்கு பின் தள்ளப்பட்டுள்ளாரா எம்.ஏ.சுமந்திரன் என்கின்றனர் தமிழரசு மூத்த தலைவர்கள்.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் (வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் பேரில் யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் ஆரோக்கியமான பல விடயங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான இளைஞர்களின் ஆரோக்கியமான பங்களிப்பானது வடகிழக்கில் எமது தமிழரின் இருப்புக்கு ஓர் ஆணிவேராக அமையுமென சுமந்திரனின் பிரச்சாரத்தை பிரச்சாரப்படுத்தியுள்ளார் சாணக்கியன்.

கிழக்கில் பிள்ளையான்,வியாழேந்திரன் என பல முனை போட்டிகளை எதிர்கொண்டுள்ள சாணக்கியனை அங்கு வலுப்படுத்தாது இங்கு தருவித்து தனக்கு வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.


No comments