கோத்தா கனவு பலிக்கிறது:இரணைதீவில் எதிர்ப்பு!

இலங்கை அரசு எதிர்பார்த்தது போன்று கொரோனாவால் உயிரிழந்தோரது சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இன்று அணிதிரண்ட அவர்கள், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொரோனா மரண சலங்களை இங்கு புதைக்க இடமளிக்க முடியாதெனவும் இன்று மாலை வரை எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட போவதில்லை எனவும் அவர்கள் கூறி போராடிவருகின்றனர்.

அண்மைக்காலமாக தமிழ்-முஸ்லீம் மக்களிடையே ஏற்பட்டுவரும் நல்லுறவு பயணத்தை சிதறடிக்கவே இரணைதீவை இலங்கை அரசு தெரிவு செய்திருப்பதான குற்றச்சாட்டின் மத்தியில் மக்கள் போராட்டம் முனைப்பு பெற்றுள்ளது.

ஏற்கனவே இரணைதீவு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments