முதலமைச்சர் கதிரைக்கு விருப்பம்:மாவை!


வடமாகாண முதலமைச்சர் கதிரைக்கு போட்டியிட தனது விருப்பத்தை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா பகிரங்க வெளியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக தேர்தலை நாங்கள் முகங்கொடுப்போம் எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு கூட்டு அல்ல எங்களுக்கு ஒரு சிறந்த பலம் வாய்ந்த கட்டமைப்பு புலம்பெயர் ரீதியிலும், இங்கும் உருவாக வேண்டும். அது பல நாடுகளின் நிபுனத்துவம் வாய்ந்தவர்களால் இன்று உச்சரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆளுங்கட்சிகள் வடக்கு கிழக்கைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் நாங்களும் எவ்வளவு தூரத்திற்கு மிகப் பெரிய அளிவில் ஒன்றுபட்டு செயற்பட முடியும், தேர்தல் வெற்றியைப் பெற முடியும் என்பது பற்றி ஆராய்வோம் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


No comments