குருந்தூர்மலை அடிவாரத்திற்கு அனுமதி!



முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் அண்டின் பின்னர் இந்த ஆண்டு சிறீகோணமடு பிள்ளையார் ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

ஏற்கனவே தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த ஆலயங்களை தேடி இலங்கை தொல்லியியல் திணைக்களம் ஆய்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் சிவலிங்கமொன்று புதையுண்ட நிலையில் அண்மையில் ஆய்வின் போது  தொல்லியல் திணைக்களத்தால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


No comments