காணாமல் பேர்னோர்:டக்ளஸ் பட்டியல் போடுகின்றார்!



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேட அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் புறப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் ஒத்துழைப்புக்கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் குழுவொன்றினை அமைத்து அதனூடாக ஒரு மாத காலத்திற்குள் ஒரு தீர்வினை பெற்று தர முடியும் என கடற்தொழில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களில் பலவும் தமது பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இருப்பதாக வாதிட்டதனையடுத்து டக்ளஸ் தர்மசங்கடத்திற்குள்ளானார்.

இந்நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கி , 10 பேர் கொண்ட குழுக்களாக உருவாக்கி அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை சேகரித்து அதனூடாக பெறப்படும் விபரங்கள் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். 

எதிர்வரும் ஒன்றரை மாத கால பகுதிக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற முடியும். என தெரிவித்தார். 

அதன் போது , பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பலருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை என உறவினர்களால் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இவை தொடர்பில் தனக்கும் தெரியும் எனவும், இந்த பிரச்னையை தீரா பிரச்சனையாக வைத்திருக்க விரும்பவில்லை. சில அரசியல்வாதிகளின் தலையீடு இந்த விடயத்தை தீரா பிரச்சனையாக வைத்திருக்கின்றார்கள். அதன் மூலம் அரசியல் செய்ய முயல்கின்றனர். ஆனால் நான் இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவே  விரும்புறேன். அதற்காகவே இன்றைய தினம் உங்களை சந்தித்தேன். எதிர்காலத்தில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்து சென்று உங்களுக்கான தீர்வினை பெற்று தர முடியும் என எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.


No comments