கிணற்றையல்ல - நாட்டிய கல்லை காணோம்: புதிய வடிவேல்!

வடிவேல் பாணியில் பொலிகண்டியில் தான் நாட்டிய நினைவுக் கல்லை தேடிவருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் தனித்து சுமந்திரன் - சாணக்கியன் அணி மக்கள் காலை கடன் கழிக்கும் கரையோரத்தில் கல்லை போட்டு அதனை அடிக்கல் நாட்டலென அறிவித்திருந்தனர்.

அத்துடன் நாட்ட எடுத்து வந்திருந்த கல்லை காணோம் எனவும் அப்போது அறிவித்துமிருந்தனர்.


ஆயினும் உண்மையான நினைவு நடுகல் அருகாகவுள்ள அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் உத்தியோகபூர்வமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி ஏற்பாட்டுக்குழுவால் நாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சி ஆதரவாளர் கல்யாண வீட்டிற்கு வருகை தந்திருந்த சாணக்கியன் சுமந்திரன் சகிதம் தாங்கள் வீசிய கல்லை தேடி புகைப்படமெடுத்து சென்றனர்.No comments